கல்முனை ரோட்டரி 1000 மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை



வி.ரி. சகாதேவராஜா-
ல்முனை ரொட்டரிக்கழகம், அவுஸ்ரேலிய Global Hand Charity அமைப்பின் அனுசரணையுடன் 1000 மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கவுள்ளது.

கண்ணாடிக்கான தேவையிருந்தும் அதனைப்பெற்றுக்கொள்ள வசதியில்லாத வறுமைக்கோட்டின் கீழ் இருக்கின்றவர்களுக்கு இக்கண்ணாடிகள் வழங்கப்படும் என்று கல்முனை ரோட்டரி கழக பிரமுகர் ரோட்டரியன் மு. சிவபாதசுந்தரம் தெரிவித்தார்.

ஏற்கனவே கண்ணை பரீடசித்து மருத்துவ சீட்டினை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இவேலைத்திட்டமானது 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 26,27ந் திகதிகளில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அவுஸ்ரேலிய வைத்தியர்களினால் கல்முனை கண் வைத்தியர்களின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படும்.

இவ்வேலைத்திட்டம் குறிப்பாக கரையோர பிரதேசத்தை சார்ந்த 13 பிரதேச செயலக பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :