இளவாலை "வாலிபர் கிண்ணம்" 2023 ஆனைக்கோட்டை யூனியன் அணி வசம்.


அஸ்ஹர் இப்றாஹிம்-

நாவாந்துறை சென் மேரிஸ் அணியை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது ஆனைக்கோட்டை யூனியன்

இளவாலை வருத்தபடாத வாலிப சங்கம் தனது 10ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்திய அணிக்கு 09 பேர் உள்ளடக்கிய "வாலிப கிண்ணம்" மாபெரும் உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நாவாந்துறை சென் மேரிஸ் அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் அணி மோதியது.
 
பெரும் ஆதரவாளர்களுடன் ஆரம்பமான போட்டியில் ஆரம்பத்தில் இருந்து மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் எதிரணி கோல்கம்பங்களை மாறி மாறி ஆக்கிரமிக்க இரு அணிகளும் கோல்போடும் வாய்புக்களை வீணடித்தன.

 சிறப்பாக விளையாடிய இரு அணிகளும் தமது சிறப்பான பின்வரிசை தடுப்பாட்டம் , கோல்காப்பளரின் சிறப்பான காப்பாட்டம் காரணமாக கோல் புகுத்தும் வாய்ப்புக்கள் தடுக்கப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் முறையற்ற ஆட்டத்தினால் சென் மேரிஸ் அணியின் வீரர் சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற 08 வீரர்களுடன் ஆட்டத்தை தொடர
முதல் பாதியாட்டம் 00:00 என முடிவுற்றது.

இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பத்திலிருந்து ஆட்டம் சூடுபிடித்தது. சென்மேரிஸ் அணியினர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதும் கோல் போடுவதற்கான வாய்புக்கள் தவறவிடப்பட்டது . பின்னர் மிகச் சிறப்பாக விளையாடிய இரு அணியும் கோல் போடுவதற்காக போராடிய போதும் இரு அணியின் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தாலும் இரு அணியின் வீரர்களின் கோல்காப்பாளர்களின் சிறப்பான கோல்காப்பின் மூலமும் கோல் போடுவதற்காக கடும் முயற்சி மேற்கோண்டும் பலன் அளிக்காமல் போக ஆட்டம்
00:00 என சமனிலையில் நிறைவு பெற்றது.

வெற்றியை தீர்மானிப்பதற்கான சமனிலை தவிர்ப்பு உதையில் 05:04 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வருத்தபடாத வாலிப சங்கத்தின் வாலிபக்கிண்ணத்தை கைப்பற்றியது ஆனைக்கோட்டை யூனியன் அணி.

போட்டியின் ஆட்ட நாயகனாக சென் மேரிஸ் அணியின் வீரர் சிந்துஜன் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :