கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கலை மன்றங்களுக்கு இடையேயான கலை இலக்கியத் திறன் அறிவுப் போட்டி - 2023



க்கரைப்பற்று ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

"ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் முதல் சுற்றுத் தொடக்கம் ஏழு சுற்றுக்களிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இறுதிப் போட்டியிலும் வெற்றிபெற்று முதல் இடத்தினைத் தனதாக்கிக் கொண்டது.

இந்நிகழ்வுகள் களுதாவளை மகா வித்தியாலயத்தில் இரு நாட்கள் (28,29) நடைபெற்றன.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு. சரவணமுத்து நவநீதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நடுவர்களாக எழுத்தாளர் உமா வரதராஜன் , கவிஞர் மன்சூர் ஏ காதர் ஆகியோர் கடமையாற்றினர்.

மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

01. இதன் முதல் சுற்று கடந்த செப்டம்பர் மாதம் "இலக்கிய அறிவுசார் திறன்" எழுத்து மூலமான வினாவிடை போட்டியாக நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பதிவு செய்யப்பட்ட 150 ற்கு மேற்பட்ட கலை மன்றங்கள் பங்கேற்றன

இப்போட்டிகள் பத்து தலைப்புக்கள் உள்ளடங்கலாக வகுக்கப்பட்டிருந்தன:


1. தமிழ் இலக்கியம்
2. மேலைத்தய இலக்கியம்
3. கலை பண்பாடு
4. உள்ளூர் சினிமா
5. உலக சினிமா
6. கிராமிய கலைகள்
7. நாட்டார் கலைகள்
8. கவின் கலைகள்
9. பன்பாட்டு நூல்கள்
10. மற்றும் சகல கலை இலக்கியங்கள்

இப்போட்டிகள் யாவும் கிழக்கு மாகாணத்தின் தமிழ் மொழி மூலமான, பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்து செயற்பட்டுக்கொண்டிருகின்ற கலை இலக்கிய மன்றங்களை வலுவூட்டும் நோக்கத்துடனும், அவர்களை திறமையாக இயங்கச் செய்வதற்குமான நோக்கத்துடனும் கலை இலக்கிய அறிவினை மேம்படுத்தும் நோக்கத்துடனும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இப்போட்டிகளுக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர்கள் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

''ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம்",
அக்கரைப்பற்று கலாசார உத்தியோகத்தரும்

அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தருமான தேச கீர்த்தி ஏ. எல். தௌபீக் அவர்களூடாக இப்போட்டியில் பங்கு பற்றியது.

ஆரம்பத்திலிருந்து இறுதிப் போட்டி வரைக்கும் கலந்துகொண்ட மன்றத்தின் அங்கத்தினர்களுக்கும் குறிப்பாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பிரிவின் விரிவுரையாளர் அப்துல் றஸாக், கலாபூஷணம் அருட்கவி அக்கரையூர் அப்துல் குத்தூஸ் , கலாபூஷணம் எம்.ஏ.நஜூமுதீன் ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் மன்றம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

02. நேரடி கேள்வி பதில் போட்டிகள் முதல் நாள் இரண்டு சுற்றுக்களாக நடைபெற்றன. இரண்டு சுற்றுக்களிலும் ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றமும் வெற்றியீட்டி தெரிவாகியது.


03.இறுதிச் சுற்றுக்களிலும் முதல் சுற்றில் எதிரணியினர் 15 புள்ளிகள் எடுக்க, ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் 75 புள்ளிகள் பெற்று வெற்றியீட்டியது.

மூன்றாம் சுற்றில் எதிர் அணியினர் 40 புள்ளிகள் பெற, " ஹல்லாஜ் இஸ்லாமிய ஜெர்மன் கலை மன்றம்" 80 புள்ளிகள் பெற்று வெற்றியீட்டியது.

அரையிறுதி போட்டியில் தெரிவாகி அதிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியிலும் ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் வெற்றி பெற்று வாகை சூடியது.


பல்துறைக் கலைஞர்- றசாக் முஹம்மட் அலி -
ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றத்தின்
உப தலைவரும் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரும்.
2023.10.29








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :