திருமதி நபீமா பளீல் பழைய தபாலக வீதி, கல்முனையை வசிப்பிடமாகக் கொண்டவர். இவர் 1992-06-01 ஆந் திகதி கமுஃ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று அதன் பின்னர் கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயம், சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம், லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றி பின்னர் 2014.01.25 ஆந் திகதி முதல் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியையாக கடமையாற்றிவந்த நிலையில் தனது 31 வருடகால சேவையின் பின்னர் நேற்று முதல் ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.
இலங்கை துறைமுக அதிகார சபையில் கடமையாற்றிய கவிஞர் பளீல் அவர்களின் அன்புத் துணைவியும், மிப்ஸான் அவர்களின் அன்புத் தாயுமான இவர் சிறந்த ஆசிரியையாகவும், நற்குணமும், தாராள குணமும் கொண்ட நல்லொழுக்கப் பண்பும் கொண்டவர்.
ஆசிரியையின் 31வருட சேவையினைப் பாராட்டி கௌரவித்து வழியனுப்பும் நிகழ்வு ஜீ.எம்.எம் பாடசாலையின் ஆசிரியர் நலன்புரி அமைப்பினால் அதிபர் ஜனாப். எம்.ஐ.எம். இல்லியாஸ் அவர்களின் தலைமையில் நேற்று மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது.
0 comments :
Post a Comment