பொரளை அஹதிய்யாவின் 37ஆவது மீலாதுந் நபி விழா.


எம்.எஸ்.எம்.ஸாகிர்-

பொரளை அஹதிய்யா இஸ்லாமிய கல்வி நிலையத்தினால் நடாத்தப்பட்ட 37 ஆவது மீலாதுந் நபி விழா தெமட்டகொட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. மாநாட்டு மண்டபத்தில் (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ருவனிகம சமாதி நாயக்க தேரர், சிவஸ்ரீ குமாரசுவாமி குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மற்றும் பேராயர் ஜே. ஞானராஜா பாதிரியார் உட்பட்ட சர்வ மத தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், அஹதிய்யாப் பாடசாலையின் அதிபர் அல்-ஹாஜ் ஷிப்லி ஹாஷிம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட விஷேட விருந்தினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :