நூருல் ஹுதா உமர்-
றிஸ்லி முஸ்தபா கல்வி உதவி மற்றும் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் "Future Professionals" எனும் மாபெரும் விழா நேற்று மாலை சாய்ந்துமருது அல் ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் அமைப்பின் பிரதி தலைவர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரிஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எ.எல்.எம். ஐயூப் கான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் றிஸ்லி முஸ்தபா எடியுகேசன் எயிட் அமைப்பின் ஸ்தாபக தலைவரும், மயோன் குரூப் நிறுவனத்தின் பணிப்பாளர் எம். றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கல்முனை வலைய கல்வி பணிப்பாளர் எம். எஸ். சகுதுல் நஜீம் கெளரவ அதிதியாக கலந்து சிறப்பித்து விசேட உரை நிகழ்த்தினார்.
கல்முனை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர்களான எம். எச். எம். ஜாபிர், பீ.ஜிஹானா அலீப், எம். எச். றியாஸா, என்.வரனியா, சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் என். எம். எ.மலீக், சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய அதிபர் யூ. எல்.நஸார், அமைப்பின் செயலாளர் திடீர் மரண விசாரணை அதிகாரி எ. எச்.அல் ஜவாஹிர், அமைப்பின் பிரதி தலைவர்களில் ஒருவர் சுகையில் ஜமால்டீன், அமைப்பின் ஆலோசகர் சாய்ந்தமருது அல் வித்தியாலய ஆசிரியர் எம். எச். எ.மாஹிர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும்
மேலும் ஆசிரியர்கள், அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக இடம் பெற்ற உயர்தர பரீட்சையில் கல்முனை கல்வி வலையத்தில் பாடசாலையூடாக தோற்றி முதல் தடவையில் 3A சித்திகளை பெற்ற மாணவ மாணவிகள் இதன் போது சிறப்பு நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கும்பட்டனர்.
மேலும் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் அரச விருதுகள் பெற்ற ஆசிரியர்களுக்கும் நிகழ்வில் கெளரவிக்கும்பட்டனர் விசேட அம்சமாகும்.
7 Attachments • Scanned by Gmail
0 comments :
Post a Comment