உலகெங்கிலும் உள்ள தமிழ் தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள்,துறைசார்ந்தவர்களை ஒன்றிணைத்து இயங்கும் எழுமீன் (The Rise)அமைப்பின் 41வது மாதாந்த கூட்டம் கத்தாரில்(25)நடைப்பெற்றது.
கத்தார் எழுமின் அமைப்பின் தலைவர் சக்திவேல் மகாலிங்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்ற மாதாந்த கூட்டத்திற்கு பிரதம அதிதியாக சேது பொறியியல் கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.முகம்மது ஜலீல் மற்றும் விசேட அதிதியாக நேச்சுரல்ஸ் பியூட்டி அகாடமியின் வணிக வளர்ச்சிப் பிரிவின் முதன்மை செயல் அதிகாரி டி.சாக்கோசென் மத்தாய் கலந்து கொண்டார்.
எழுமீன் அமைப்பானது நாற்பது நாடுகளில் தமிழ் தொழில்முனைவோர்,தொழில்வல்லுநர்கள்,துறைசார்ந்தவர்களை ஒன்றிணைத்து இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலக தமிழ்த் தொழில்முனைவோர் திறனாளர்கள் ஒன்றினையும் மாநாடு எதிர்வரும் நவம்பர் 24– 26வரை ஓமான் நாட்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment