அஸ்ஹர் இப்றாஹிம்-
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி அம்பாறை ஐக்கிய வர்த்தகர் சங்கம் மற்றும் கைத்தொழில் சம்மேளனம் இணைந்து ஒழுங்கு செய்திருந்த விஷேட சிறுவர் களியாட்ட நிகழ்வு அம்பாறை எச்.எம்.வீரசிங்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
முன்னாள் அம்பாறை நகரசபை தவிசாளர் சமிந்த சுகத் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.
சிறுவர்கள் இந்த உலகில் கவலைகளை மறந்து சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும். அவர்கள் தமது பெற்றோருடனும் குடும்பத்தினரோடும் சந்தோசமாக இந்த நிகழ்வைக் கொண்டாடினார்கள்.
0 comments :
Post a Comment