அகில இலங்கை கராத்தே-தோ சம்மேளனத்தின் கிழக்கு மாகாணத்திற்கான மாவட்ட மற்றும் மாகாண சுற்று போட்டியும் ஐ.எம்.ஏ ஏற்பாடு செய்து நடாத்திய இரண்டாம் கட்ட திறந்த கராத்தே போட்டி 2023 நிகழ்ச்சிகளில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளதாக பாடசாலையினுடைய கராத்தே பயிற்றுவிப்பாளர் மௌலவி ஏ.ஆர்.நவாஸ் தெரிவித்தார்.
மேற்படி கராத்தே - தோ சம்மேளனம் முதலாம் கட்டமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒருநாள் சுற்றுப்போட்டியினை நடாத்தியது இதில் சுமார் 600 பேர் பங்குபற்றியிருந்தனர்.
இப்போட்டியில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் 22 பேர் பங்குபற்றி; 15 மாணவர்கள் 01ம், 02ம், 03ம் இடங்களை பெற்று தேசியத்திற்கு தெரிவாகினர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பாடசாலையின் முதல்வர் எம்.ஏ. ஹலீம் இஸ்ஹாக் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலையில் மாணவர்களை கௌரவித்து வரவேற்றதுடன் சான்றிதழ்களும் பரிசீல்களும் வழங்கி கௌரவித்தார்கள்.
இதே வேளை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட திறந்த கராத்தே போட்டியில் 11 மாணவர்கள் பங்கு பற்றி 09 மாணவர்கள் 02ம், 03ம் இடங்களை பெற்றுக்கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் என்று பாடசாலையினுடைய கராத்தே பயிற்றுவிப்பாளர் மௌலவி ஏ.ஆர்.நவாஸ் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment