காரைதீவு விபுலாநந்தா நாட்டிய நிருத்தியாலய மாணவிகள் தேசிய தமிழ் சிங்கள நடன போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
இத் தமிழ் சிங்கள நடன தேசிய மட்ட போட்டியானது 01.10.2023 அன்று கண்டி பொல்கொல மகாவலி தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது.
புத்தசாசன மற்றும் கலை,கலாசார அமைச்சின் ஏற்பாட்டில்" பிரதீபா" தேசிய மட்டப் போட்டிக்கு கல்முனை கலாசார மத்திய நிலையத்தினூடாக காரைதீவு விபுலானந்தா நாட்டிய நிருத்தியாலய மாணவிகள் பங்கேற்றனர்.
அங்கு அவர்கள் 2ம் இடத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.
பயிற்றுவித்த நடன ஆசிரியை திருமதி சர்மினி சுதாகரன் மற்றும் ஸ்தாபகர் ஜெயகோபன் தக்ஷாளினி ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
வவுனியா நிருத்தியாலயம் முதலிடத்தை பெற்றது.
விபுலானந்தா நாட்டிய பாடசாலை தொடங்கி நான்கு வருட காலத்தில் முதல் தடவையாக தேசிய மட்டத்தில் தோற்றி முதல் தடவையாக இரண்டாம் நிலையில் சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. விபுலானந்தா நாட்டிய நிருத்தியாலய மாணவிகள் தேசிய சாதனை!
வி.ரி. சகாதேவராஜா-
காரைதீவு விபுலாநந்தா நாட்டிய நிருத்தியாலய மாணவிகள் தேசிய தமிழ் சிங்கள நடன போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
இத் தமிழ் சிங்கள நடன தேசிய மட்ட போட்டியானது 01.10.2023 அன்று கண்டி பொல்கொல மகாவலி தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது.
புத்தசாசன மற்றும் கலை,கலாசார அமைச்சின் ஏற்பாட்டில்" பிரதீபா" தேசிய மட்டப் போட்டிக்கு கல்முனை கலாசார மத்திய நிலையத்தினூடாக காரைதீவு விபுலானந்தா நாட்டிய நிருத்தியாலய மாணவிகள் பங்கேற்றனர்.
அங்கு அவர்கள் 2ம் இடத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.
பயிற்றுவித்த நடன ஆசிரியை திருமதி சர்மினி சுதாகரன் மற்றும் ஸ்தாபகர் ஜெயகோபன் தக்ஷாளினி ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
வவுனியா நிருத்தியாலயம் முதலிடத்தை பெற்றது.
விபுலானந்தா நாட்டிய பாடசாலை தொடங்கி நான்கு வருட காலத்தில் முதல் தடவையாக தேசிய மட்டத்தில் தோற்றி முதல் தடவையாக இரண்டாம் நிலையில் சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment