நூருல் ஹுதா உமர்-
சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாய் புற்றுநோயின் முன் அறிகுறிகளைக் கண்டறிதலும் வாய் புற்றுநோயினை தடுத்தலும் எனும் தொனிப்பொருளில் கல்முனை பிராந்திய வாய் சுகாதாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி செயலமர்வு இன்று (12) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய வாய் சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.சரூக் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மாவட்ட மற்றும் பிரதேச வைத்திசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், பல் மருத்துவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி செயலமர்வில் அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலை வாய், தாடை, முகம் சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் டிலான் பெர்னான்டோ பிரதம வளவாளராக கலந்துகொண்டு விரிவுரை நிகழ்த்தினார். இதன்போது நோயாளிகளை நேரடியாக பரிசோதனை செய்துததுடன் செய்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment