எம்.எம்.றம்ஸீன்-
ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் மாநாடு காத்தான்குடியில் கடந்த சனிக்கிழமை காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
"குடும்பம் எங்கள் விழி ஆற்றல் எங்கள் வழி" எனும் தொனிப் பொருளில் இந்த மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இலங்கையின் பல பாகங்களில் இருந்து முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இலக்கிய வித்தகர் சம்மாந்துறை மசூறா தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு நிலை பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ், காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா ஸபீன் ,உதவிக் கல்விப் பணிப்பாளர் முருகு தயானந்தன் ,விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் உட்பட எழுத்தாளர்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பெண்களின் கவியரங்கு, நூல்வெளியீடு, ஆவண ஓவியாக்கம், பாடல், போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிப்பும் இடம் பெற்றது.
0 comments :
Post a Comment