எதிர்வரும் நவம்பர் 25ம் திகதி, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினமாகும். இவ்வாறான சூழலில், தற்போது நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான
வன்முறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. என பெண்கள் மத்தியஸ்தான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பத்மினி விரசூரிய ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்
அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்....
(1) குருணாகல் பிரதேசத்தில் பஸ் வண்டியொன்றுக்குள் சாரதி, நடத்துனர், மற்றும் இன்னும்
இரண்டு இளைஞர்களால் பதினைந்து வயது பாடசாலை மாணவியொருவர் மனிதாபிமானமற்ற
முறையில் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
(2) அவ்வாறே பதுளை பிரதேசத்தில் ஒன்றரை
வயதுக் குழந்தை மீது அறுபத்து மூன்று வயதுடைய அக்குழந்தையின் பாட்டனாலேயே
பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட செய்தியும் அறிக்கையிடப்படுகின்றது.
(3) மேலும் தாம் பணியாற்றும் நிறுவனத்திலேயே நிறுவனத்தின் பிரதானியாலும் அவரது மனைவியாலும்
துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணைப் பற்றியும் கந்தானை பிரதேசத்தில் அறிக்கையிடப்படுகின்றது.
(4) அதே போன்றதொரு செய்தி பிலியந்தலைப் பிரதேசத்தில் சிறப்பு அங்காடியொன்றில் பெண்ணொருவர் மனிதத் தன்மையற்ற முறையில் தாக்கப்படுகின்றார்.
(5) இவற்றைப் பற்றிப் பேசப் போன நாட்டின் உயர்ந்த இடத்திலுள்ள பெண் அமைச்சரொருவரும்
உடல் மற்றும் வார்த்தைகளால் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
இவை பெண்களுக்கு எதிரான வன்முறையை குறித்து நிற்கின்ற அண்மைக் காலத்தில்
இடம்பெற்ற சில சம்பவங்கள் மட்டுமே
என, நாம் கண்ணையும் வாயையும் மூடிக்
கொண்டிருக்க முடியாது.
ஊடகங்களில் அல்லது பொலிசில் அறிக்கையிடப்படாத இன்னும் எவ்வளவு சமபவங்கள் உள்ளன?
பொலிஸாரின் அறிக்கைகளுக்கு ஏற்ப, இலங்கையில் பெண்களின் சனத்தொகையில் நான்கு
பேரில் ஒருவர் ஏதேனுமொரு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களாகக் காணப்படுகின்றனர். அவ்வாறே ஒரு நாளில் 3 பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள்
இலங்கையில் எங்காவது ஓரிடத்தில் இடம் பெறுகின்றது. என அறிக்கையிடப்பட்டுள்ளது.
2023 பொலிஸ் தலைமையக புள்ளி விபரங்களுக்கு ஏற்ப,
சிறுவர்கள் மீதான குற்றச் செயல்கள் 2331,
பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் 1150
பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற குற்றங்கள் 710 (கொலைகள், தாக்குதல்கள், பாரதூரமான குற்றச் செயல்கள்) சிறு குற்றங்கள் சிறுவர்களுக்கு எதிரானவை 2092 சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் 1086 பெண்களுக்கு எதிரான சிறு குற்றங்கள் 6234 பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் 1765 வேறு குற்றச் செயல்கள் 2978 (தாக்குதல்கள்) இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பிரசித்தி பெற்ற சமூக வலைத்தளமான முகநூலில்
சிலர் இவ்வனைத்து துன்புறுத்தல் ரீதியான நிலைமைகளையும் நிவர்த்தி செய்வதற்கு
நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மகளிர் சமூக செயற்பாட்டாளர்கள் அல்லது மகளிர்
அமைப்புகளே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
அது ஒவ்வொரு பிரசையினதும் சமூகக் கடமை என்பதைப் பலர் மறந்துவிட்டனர். அவள் ஆண்களின் தாய், மனைவி, சகோதரி, மகள் அல்லது பாட்டியாவாள். எனினும் அதனால் மட்டுமேயன்றி பெண்
என்ற காரணத்தினாலேயே சமூகத்தில் பெண்களுக்கு உரிய கௌரவத்தைப் பெற்றுத் தர
வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பது ஒவ்வொரு ஆணினதும் கடமையாகும். அது
ஆண் பெண் என்ற பேதமின்றி இரு தரப்பும் ஒத்துழைப்புடன் செய்ய வேண்டிய பணியாகும்.
பெண்களுக்கு எதிரான வன்முறை மனித உரிமை மீறலாகும். இவ் விடயங்களுக்கு
ஏற்புடையதான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட
உடன்படிக்கைகளைப் போன்றே பல எண்ணிக்கையிலான சாசனங்களிலும் இலங்கை
இணக்கத்தைத் தெரிவித்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான கைச்சாத்தையும்
இட்டுள்ளது. எனினும் அச்சாசனங்களும் உடன்படிக்கைகளும் புத்தகங்களுக்கும்
ஆவணங்களுக்கும் மட்டுப்பட்டதாக மட்டுமே காணப்படுகின்றன என்பதற்கு ஏற்புடைய
நிறுவனங்களும் திணைக்களங்களும் செயற்படும் விதம் சான்றளிக்கின்றது.
குருணாகல் சம்பவத்தில் துஷ்பிரயோகம் செய்தவரும் அதற்கு உதவி செய்தவருமாகிய
இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட போதும் அதற்கு அப்பால்
நீண்ட மௌனம் நிலவுகின்றது. பெரும்பாலும் பலம்பொருந்தியவர்களின் இடையீடுகளின்
பின்னர் அவர்கள் குற்றமற்றவர்களாக்கப்பட்டு விடுதலை செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைக்கு எதிராக வலிமையான அவ்வாறே மாபெரும்
சமூகக் கருத்தியலொன்றைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அது தொடர்பில் ஆண், பெண்,
ஏழை பணக்கார, கிராம, நகர, இன, சாதி பேதங்களின்றி ஒன்றிணைந்து குரலெழுப்ப
வேண்டியுள்ளது. துன்புறுத்தல் வீட்டுக்குள், பாடசாலையில், பணியாற்றுமிடத்தில்,
வைத்தியசாலையில், போய்வரும் பாதைகளில் அல்லது ஏதேனுமொரு இடத்தில் இடம்பெறக்
கூடும். அது தொடர்பில் ஒட்டுமொத்த சமுதாயமே விழிப்புடன் இருக்க வேண்டியிருப்பதுடன்
எதிர்ப்பைத் தெரிவிக்கவும், வன்முறைக்கு எதிராக அந்த தருணத்திலேயே நடவடிக்கைகளை
எடுக்கவும் முன்வர வேண்டும்.
இவ்வன்முறை தொடர்பில் வெகுசன ஊடகம் சாதிக்கும் மௌனமும் கவலைக்குரியது. இந்தியாவில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளான ‘நிர்பயா’ வின் சம்பவம் மற்றும் அதற்காக அமுல்படுத்தப்பட்ட இயக்கம் எம்மால் மறக்கடிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து
வகையான வன்முறைகளையும் எதிர்ப்போம். அனைத்துவித துன்புறுத்தல்களையும் ஒழிப்போம்.
அதற்காக அனைத்து விதமான வெகுசன அமைப்புகள், மகளிர் அமைப்புகள், சிவில் அமைப்புகள், மதம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்ற ரீதியில் ஒன்றிணைவோம். எதிராகக் குரல் எழுப்புவோம். பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் வன்முறைகளும் துன்புறுத்தல்களும் அற்ற கௌரவமான சமூகமொன்றை வழங்குவதற்காகக் கைகோர்ப்போம்
0 comments :
Post a Comment