உலகசாதனை படைத்த மாணவன் மீறாவோடை அல் ஹிதாயா மாணவன் அன்வர் அப்னான்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ந்தியன் இன்சிடியூட் ஒப் சயன்ஸ் ஜூனியர கோட் கிளாஸ் (Indian institute of Science Junior Code Clash 2023) உலகலாவிய ரீதியில் Coding சம்பந்தமாக நடாத்திய போட்டியில் மீறாவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் தரம் 09ல் கல்வி பயிலும் மாணவன் 985 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பெற்று நாட்டிற்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்னார்.

12.10.2023 அன்று இலங்கை நேரப்படி இரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 02 மணி வரை நடை பெற்ற நிகழ்நிலை பரீட்சையில் உலகத்தின் பல நாடுகளில் இருந்தும் 2260 மாணவர்கள் பங்குபற்றிய இப் போட்டியில் இலங்கையில் இருந்து 02 மாணவர்கள் மாத்திரமே பங்கு கொண்டனர்.

02 மணித்தியாலங்கள் இப் போட்டியில் வெற்றி கிடைத்தது என்னுடைய வெற்றிக்காக என்னை உச்சாகப்படுத்திக்கொண்டு இருக்கும் பெற்றோர்கள், என்னுடைய சகோதரிகள் ஆகியோருடன் நான் கூட எதிர்பார்க்கவில்லை இந்த வெற்றி கிடைக்கும் என்று அன்வர் அப்னான் தெரிவித்தார்.

உலகத்திலே அதிக வலம் பொருந்திய நாடுகளும் பங்குபற்றியதுடன் அதிலும் தொழிநுட்ப அறிவில் மேலொங்கி காணப்படும் நாடுகளில் இருந்து கூட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இறைவன் துணைகொண்டு எனது ஆசான்களின் வழிநடத்தலுடன் எனது பெற்றோரின் கனவுகளை நனவாக்க முடியும் என்று நம்பினேன் அதனை இறைவன் நிறைவேற்றித்தந்தான்.

அன்வர் அப்னான் தொடர்ச்சியான சாதனைகளை புரிந்து வந்த மாணவன் என்பதுடன் தற்போது உலக மட்ட பார்வைக்கும் எமது நாட்டையும் தனது பாடசாலையின் பெயரையும் பெருமைப்படுத்திய இம் மாணவன் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்களை பாடசாலை சமுகம் தெரிவித்துக் கொள்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :