வி.ரி.சகாதேவராஜா-
சம்மாந்துறை வலய நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய சர்வதேச ஆசிரியர் தின விழா அதிபர் திருமதி. நிலந்தினி ரவிச்சந்திரன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக நட்சத்திர அதிதியான வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளரும், பாடசாலையின் வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா மற்றும் அதிபர் ஆசிரியர்கள் ஆளுரய பூமாலைகள் சூட்டப்பட்டு பாண்ட் வாத்தியம் சகிதம் வரவேற்கப்பட்டார்கள்.
பின்பு மண்டபத்தில் ஆசிரியர் தின விழா பிரதி அதிபர் பி.ஜெகதீசனின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது .
அங்கு, அதிபரின் வழிகாட்டலில் உயர் தரப் பிரிவு பொறுப்பாசிரியர் ந. கோடீஸ்வரனின் நெறிப்படுத்தலில், உயர்தர கலைப் பிரிவு மாணவர்கள் நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக கச்சிதமாக பலத்த கரகோஷத்துடன் மேடை ஏற்றினர்.
நிறைவில், பிரதம அதிதியான நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் பி. பரமதயாளன் நட்சத்திர அதிதியான வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளரும் பாடசாலையின் வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
2022 ம் ஆண்டு குறைவான விடுமுறை பெற்ற திருமதி.சுவானந்தி ரூபன் ஆசிரியையும், இலட்சுமணன் பரமதேவன் ஆசிரியரும் அதிதிகளால் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டனர்.
ஆசிரியர்களின் நிறைய கலை நிகழ்ச்சிகள் மாணவர்களை குதூகலிக்கச் செய்தன.
கூடவே ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் கொய்யா மரக்கன்றுகளை மாணவர்கள் பரிசளித்து கௌரவித்தனர்.
ஆசிரியர்களின் வில்லுப்பாட்டு நகைச்சுவை பாடல்கள் ஆடல்கள் நாடகங்கள் கவிதைகள் விளையாட்டுகள் என்று மேடை களைகட்டியது.
0 comments :
Post a Comment