அஸ்ஹர் இப்றாஹிம்-
கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் தேர்தல்கள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து பாடசாலைகள் தோறும் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 2023ம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டு தெரிவுக்கான தேர்தல் கடந்த 26.09.2023 தேர்தல் ஆணையாளர் செயற்பட்ட கல்லூரி அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்துக்கு 150 மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு தரம் 6 முதல் 13 வரையுள்ள சுமார் 2500 மேற்பட்ட மாணவிகள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் வேட்பாளர்களாக 258 மாணவிகள் போட்டியிட்டனர்.
மஹ்மூத் மகளீர் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 150 மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிபர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பும் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் மாணவர் பாராளுமன்ற தேர்தல் குழு இணைப்பாளர் ஏ.எம். அஸ்வர் அவர்களின் ஏற்பாட்டில் கல்லூரி சேர் ரஸீக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் பிரதமஅதிதியாகவும், விஷேட அதிதியாகவும் பேச்சாளராகவும் கல்முனை வலய கல்வி அலுவலகத்தின் சமூக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் எம். மஹ்ரூப் அவர்கள் கலந்து கொண்டு மாணவர் பாராளுமன்றம் தொடர்பான விளக்கங்களை சிறந்த முறையில் மாணவிகள் மத்தியில் முன் வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை, உதவி அதிபர்களான ஏ.எச். நதீரா, என்.டி. நதீகா,
மாணவர் பாராளுமன்ற குழு இணைப்பாளர்கள் அதன் உறுப்பினர்கள், பகுதிக்கு பொறுப்பான இணைப்பாளர்கள், சமூக விஞ்ஞான போட்டி இணைப்பாளர், வரலாறு, குடியியற்கல்வி, பூவியியல் பாட இணைப்பாளர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment