வி.ரி.சகாதேவராஜா-
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய காணியொன்றின் கிணற்றிலிருந்து ஆயுதத்தோட்டா தொகுதியொன்று மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (12) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான காணியொன்றிலுள்ள கிணற்றினைச் சுத்திகரித்த போது ரி 56 ரக துப்பாக்கி ரவைக்கூடு இரண்டு, 261 தோட்டாக்கள், LMG துப்பாக்கி தோட்டாக்கள் 57, 0.22 துப்பாக்கிக்குரிய வெற்றுத்தோட்டாக்கள் 46 க்குரிய தோட்டாக்கள் 3, எம் 16 துப்பாக்கில்குரிய தோட்டாக்கள் 11, சுடர் துப்பாக்கி (Flare Gun) ஒன்று என்பன கிணற்றினுள்ளிருந்து மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கோவில் பராமரிப்பாளர் சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய குறித்த ஆயுதங்களை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த ஆயுதங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment