சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுவர் உரிமைகள் இலங்கையில் நடைமுறையில் இருக்கின்றதா?



வி.ரி.சகாதேவராஜா-


ர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுவர் உரிமை ஒப்பந்தம் இலங்கையினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் எவ்வாறு காணப்படுகின்றது என்ற மாபெரும் கேள்வி எம்முன் எழுந்து நிற்கின்றது .

இவ்வாறு மனித அபிவிருத்தி தாபனத்தின் ஸ்தாபக பணிப்பாளர் கலாநிதி. பி.பி. சிவப்பிரகாசம், கொட்டகலையில் (1) நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் தலைமையுரையாற்றும் போது குறிப்பிட்டார்.
மேற்படி அமர்வு கொட்டகலை கெம்பிரிஜ் கல்லூரியில் நேற்று நடைப்பெற்றது..

இதற்கு ஆலோசனை மற்றும் அனுசரனைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பிரதேச செயலகம், சுகாதார பணிமனை மற்றும் சிவில் கூட்டமைப்பு என்பன வழங்கியிருந்தன. .

மேற்படி நிகழ்வில் தொடர்ந்து கலாநிதி. பி.பி. சிவப்பிரகாசம் உரையாற்றும்போது,
இலங்கையை பொறுத்தவரையில் சிறுவர் தினமானது ஒக்டோபர் முதலாம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த தினமானது, வெறுமனே கொண்டாடுவதற்கான தினம் மட்டுமல்ல, சிறுவர்களுக்கு எதிரான பாகுபாடு, வன்முறை, பாலியல் துஸ்பிரயோகம், சித்திரவதை என்பவற்றிலிருந்து அவர்களை விடுதலை செய்வதற்கான அல்லது அவற்றிற்கு எதிராக போராடுவதற்கான களத்தையும் உறுதிப்படுத்துகின்ற ஒரு நாளாகவே நான் கருதுகின்றேன்.

200 வருட மலையக மக்களின் வரலாறும், மலையக சிறுவர்களின் இன்றைய நிலைமையும்
உலகில் உள்ள அனைத்து சமூக அமைப்புகளிலும், சிறுவர்கள் முக்கிய வகிப்பாகத்தினை கொண்டுள்ளனர். 18 வயதிற்கு குறைந்தவர்களை சிறுவர்களாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்திவுள்ளது. 1990களில் நடைமுறைக்கு வந்த சர்வதேச சிறுவர் உரிமை சாசனம் சிறுவர்களுக்கான உரிமை குறித்து பேசுகின்றது.

சிறுவர்கள் ஒரு விசேட குழுவினர் என்ற அடிப்படையில், அவர்களின் உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த சிறுவர் உரிமை சாசனம் அங்கத்துவ நாடுகளிடையே நடைமுறைப்படுத்தலை ஊக்குவிக்கின்றது.

இலங்கை 1991 ஆம் ஆண்டு இச்சாசனத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

மலையகத்தை பொறுத்தவரையில் 200 வருடங்கள் வரலாற்றை குறித்து பேசிக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இந்த வரலாற்றுக் காலக்கட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மலையக சமூகத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றே வருகின்றது. சிறுவர்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, விளையாட்டு, சுதந்திரம் போன்ற பல்வேறு உரிமைகள் பாதிக்கப்பட்டே வருகின்றன. ஏனைய சிறுவர்களோடு ஒப்பிடும்போது, இன்று பல்வேறு அபிவிருத்தி மாற்றங்கள் இடம்பெற்றாலும்கூட, ஒட்டுமொத்தத்தில் ஒரு அரையடிமை நிலைமையில்தான் மலையக சிறுவர்கள் வாழ்ந்துவருகின்றார்கள் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடும்போது, சிறுவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மனித அபிவிருத்தி தாபனம் போன்ற சிவில் அமைப்புகளும் மற்றும் அரச நிறுவனங்களும் பாதுகாப்பு அமைப்புகளும் நடைமுறைப்படுத்துகின்றன. மலையகத்தை பொருத்தவரையில் இலங்கையிலேயே மிக அதிகமான சிறுவர் தொழிலாளர்கள் காணப்படுகின்றனர் என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இது அடிமைத்தனத்தின் ஒரு அங்கமாகவே காணலாம். மனித அபிவிருத்தி தாபனம் சிறுவர்; தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
 
மலையக ஆண் மற்றும் பெண் சிறுவர்கள் நகர்ப்புற வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். இத்தகைய சிறுவர்கள்; துஷ்பிரயோகம், சுரண்டல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகி, அண்மைய ஆண்டுகளில் மர்மமான முறையில் இறப்பது இலங்கையின் சிறுவர் உரிமைகளின் வரலாற்றை துரதிர்ஷ்டவசமாக விடயமாகும். இதனை மனித அபிவிருத்தி தாபனமானது கடுமையாக எதிர்ப்பது மட்டுமன்றி சட்ட ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்கிவருகின்றது. கிராமப்புற மற்றும் தோட்டப்புற சிறுவர்களின்; கல்வி மற்றும் நலன் என்பது அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத பொறுப்பாகும். அவர்களின் அடிப்படை உரிமைகளை சமரசம் செய்யவோ, பண்டமாற்று செய்யவோ முடியாது.

மலையக சமூகத்தில் சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவது பாரிய பிரச்சினையாகவே இன்றும் காணப்படுகின்றது. குறிப்பாக மலையக சமூகத்தின் பெண் பிள்ளைகள் வீட்டு வன்முறை, பாலியல் கொடுமைகள், பால்நிலை சமத்துவமின்மை போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள.; மலையக பெருந்தோட்ட தொழிற்துறையில் ஈடுபடும் பெற்றோர்கள் வேலை செய்கின்ற நேரங்;களில் தங்களது பிள்ளைகளை வீடுகளில் தனியாகவோ அல்லது அயலவர்களிடம் பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களில்;, பாடசாலை போன்ற இடங்;களில் விட்டு செல்கின்றனர். அத்துடன் மிக குறைவான நேரங்களையே மலையக பெற்றோர்கள்; பிள்ளைகளுக்காக ஒதுக்குகின்றமையால்; அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தெரிந்து கொள்வற்கும் சந்தர்ப்பம் மிக குறைவாகவே காணப்படுகின்றது.

மேற்படி பிரச்சினைகள் வறுமையின் காரணமாக மட்டும் ஏற்பட்டதேன்று குறிப்பிடமுடியாது.

 இதற்கு அரசியல், சமூக, பொருளாதார, பெருந்தோட்ட கட்டமைப்பு மற்றும் மதுபானம், மதுபோதை, புலம்பெயர் தொழில், நவீன தொலைதொடர்பு போன்ற பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றது. எவ்வாறேனினும் அரசியல் ரீதியாக நிதானமாகவும் நீண்ட காலத்திற்கு தேவையான உபாய மார்க்கங்கள் அடையாளம் காணப்படவேண்டியுள்ளன. இதற்கு கொள்கைத்திட்டம் உருவாக்கம் மற்றும் தீர்க்கதரிசன தலைமைத்துவம் தேவை என்பது வழியுறுத்தப்படுகின்றது. பாரதி குறிப்பிட்டதுபோல், சிறுவர்களின் சமூக மாற்றத்திற்கு வல்லமை தேவையாக இருக்கின்றது. மாற்றம் தேவையாக இருக்கின்றது. சிறுவர்களுக்கான தன்னம்பிக்கையும், சுயமதிப்பீட்டையும் உறுதியையும் நாம் வழங்கவேண்டும் என குறிப்பிட்டார்
.
மேற்படி சிறுவர்தின அமர்வில் தலவாக்கலை பிரதேச செயலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர், கெம்பிரிஜ்; கல்லூரி அதிபர், பொலிஸ் அதிகாரி, கல்வி அதிகாரிகள், சுகாதார பணிமனை இயக்குனர் போன்றவர்களும் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர். பிரதேசத்தில் உள்ள சிறுவர்கள், பெற்றோர்கள், அரச உத்தியோகஸ்த்தர்கள், சிவில் சமூக அமைப்பினர், தொழிற்சங்கங்களை சார்ந்தவர்கள், ஆசிரியர்கள் போன்ற பல தரப்பினர்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிகளை மனித அபிவிருத்தி தாபன இணைப்பாளர் பி. ஸ்ரீகாந்த் மற்றும் ஆசிரியர் . நடராஜா போன்றோர் வழிநடத்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :