சர்வதேச ஆசிரியர்தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி குழுவும் பழைய மாணவர் அமைப்பும் இணைந்து நடாத்திய ஆசிரியர் தின நிகழ்வு நேற்று புதன்கிழமை (11.10.2023) கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
கல்லூரியின் முதல்வர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஆசிரியர்களின் வில்லுப்பாட்டு, பலூன் உடைத்தல், சங்கீத கதிரை, பந்து மாற்றுதல், தேசிக்காய் ஓட்டம் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்தோடு ஆசிரியர்களுக்கான நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கான நினைவு சின்னத்தினை பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment