அஸ்ஹர் இப்றாஹிம்-
காத்தான்குடி விளையாட்டுக்கழகம் நடாத்தும் மர்ஹும் அப்துல் ஜவாத் ஞாபகார்த்த கிறிக்கட் சுற்றுப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் மட்டக்களப்பு சென்றல் லைட் விளையாட்டுக்கழகத்தை காத்தான்குடி விளையாட்டு மைதானத்தில் எதிர்த்தாடிய சாய்ந்தமருது ஓ.ஜீ.விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
முதலில் துடுப்படுத்தாடிய சாய்ந்தமருது ஓ.ஜீ.விளையாட்டுக்கழகம் 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய மட்டக்களப்பு சென்றல் லைட் விளையாட்டுக்கழகம் 7.3 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களை பெற்ற நிலையில் மழை குறுக்கிட்டதால் மத்தியஸ்தர்களின் தீர்ப்பீன் படி DLS முறையில் சாய்ந்தமருது ஓ.ஜீ.விளையாட்டுக்கழகம் 13 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment