சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், பிரதேச செயலக சிறுவர் சபை, மற்றும்; சமுர்த்தி திணைக்களமும் இணைந்து நடாத்திய 'எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதி மிக்கவர்கள்' என்ற தொனிப் பொருளில் சிறுவர் தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (01.10.2023) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
பிரதேச சிறுவர் சபை தலைவர் எம்.அனுஸ்சன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான், ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி வீ.ரீ.அஜ்மீர்ஆகியோர் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா, பிரதி திட்டப்பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், சமுர்த்தி தலைமைய முகாமையாளர் எஸ்.ஏ.பஷீர், நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.தாஹிர், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி எம்.எச்.சபூஸ் பேகம் மற்றும் சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்;, சிறுவர் சபை உறுப்பினர்கள், சிறுவர்கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் 'எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதி மிக்கவர்கள்' என்ற சிறப்பு பேச்சினை உளவளத்துணை ஆலோசகர் மனூஸ் அபூபக்கர் நிகழ்த்தியதுடன் சிறுவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.
சிறுவர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment