தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு பொலிஸாரை கட்டிப்பிடித்த நபர்! வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம்

எச்.எம்.எம்.பர்ஸான்-

போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்ததில் இருவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் தனது குழந்தையை தாக்கிய போது அதனை தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த சம்பவத்தில் அகப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது உடம்பில் பெற்றோலை ஊற்றிக் கொண்டு தீ வைக்க முற்பட்ட போது அதை தடுக்கச் சென்ற வேளையில் அந்நபர் தீ வைத்துக் கொண்டு பொலிஸாரை கட்டிப்பிடித்துள்ளார்.

இச் சம்பவத்தில், தீக்காயங்களுக்குள்ளான நபரும் பொலிஸ் உத்தியோகத்தரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட நபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் தீக் காயங்களுடன் கால் ஒன்று உடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :