1948 இல் பாலஸ்தீன் பகுதி யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்து இன்று வரைக்கும் ஏராளமான யுத்தங்களும், தாக்குதல்களும், வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு சம்பவங்களிலும் போராளிகளைவிட பாலஸ்தீன் பொது மக்களே அதிகமாக கொல்லப்பட்டார்கள். அவ்வப்போது பொதுமக்களையும், குழந்தைகளையும் இலக்குவைத்து திட்டமிட்டே ஆக்கிரமிப்பாளர்கள் தாக்குதல் நடாத்துவது வழமை.
பாலஸ்தீன் ஆக்கிரமிக்கப்பட்டதன் பின்பு யூதர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது இஸ்லாமியர்களின் சனத்தொகை விகிதாசாரமாகும். அதாவது யூதர்களைவிட இஸ்லாமியர்களே மிக அதிக சனத்தொகையினைக் கொண்டிருந்தனர். இஸ்லாமியர்களின் சனத்தொகையை குறைத்து யூதர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தூரநோக்கில் திட்டமிட்டனர்.
அதில் ஒன்று வெளிநாடுகளில் அங்குமிங்கும் சிதறி வாழ்கின்ற யூதர்களை ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் குடியமர்த்துவது, மற்றையது ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் வாழ்கின்ற பாலஸ்தீன் பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை வெளியேற்றுவது.
போராளிகளுடனான யுத்தம் அல்லது வன்முறைகளின்போது முதலில் பொதுமக்கள் மீது யூத படைகள் தாக்குதல் நடாத்துவர். இதனால் வாழ்விடங்களைவிட்டு மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து செல்வது வழமை. பின்பு அவர்களது வீடுகள் குண்டுகள் வீசப்பட்டு தரைமட்டமாக்கப்படும்.
யுத்தம் முடிந்ததன் பின்பு இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்களது சொந்த இடத்துக்கு குடியமர வருகின்றபோது அவர்களை மீள குடியமர விடாமல் தடுத்து நிறுத்தப்படுவர். சில காலங்களின் பின்பு அவ்விடத்தில் யூத குடியிருப்புக்கள் நிறுவப்படும். இதுதான் ஆக்கிரமிப்பாளர்களினால் திட்டமிட்டு இஸ்லாமியர்களின் சனத்தொகை விகிதாசாரம் குறைக்கப்பட்டதன் பின்னணியாகும்.
அதனாலேயே பெரும்பான்மையாக இருந்த இஸ்லாமியர்களின் சனத்தொகை 1948 லிருந்து படிப்படியாக குறைந்துகொண்டு வருவதனை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றது.
அதுபோலவே அகன்ற இஸ்ரேலை ஸ்தாபிப்பதற்கு இன்று காசாவில் செறிவாக வாழ்கின்ற இஸ்லாமியர்களை முற்றாக வெளியேற்றும் திட்டத்திலேயே வடக்கு காசாவில் உள்ள பொது மக்களை வெளியேறும்படி எச்சரித்துள்ளனர்.
ஹமாஸ் இயக்கத்தினர் நிலக்கீழ் சுரங்கங்கள் அமைத்து செயற்பட்டு வருகின்றனர் என்பது இஸ்ரேலுக்கு நன்றாக தெரிந்த விடையமாகும்.
ஆனால் ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு காசா பிரதேசத்தில் உள்ள பொது மக்களின் குடியிருப்புக்கள் வேண்டுமென்றே விமானத் தாக்குதல்மூலம் அழிகப்பட்டு வருகின்றது.
யூத படைகளின் எச்சரிக்கைக்கு அமைவாக காசா பிரதேசத்திலுள்ள மக்கள் வெளியேறினால் பயங்கரவாதிகளை அழிக்கின்றோம் என்னும்போர்வையில் பொது மக்களின் குடியிருப்புக்கள் முற்றாக அழிக்கப்படும். பின்பு அகதிகளாக சென்ற மக்களை மீண்டும் மீளக்குடியமர்த்துவதற்கு ஆக்கிரமிப்பாளர்களினால் தடை விதிக்கப்படும். சில காலங்களின் பின்பு அந்த இடத்தில் யூத குடியேற்றங்கள் நிறுவப்படும் இதுதான் மக்களை வெளியேற்றுகின்ற பின்னணியாகும்.
முகம்மத் இக்பால், சாய்ந்தமருது
0 comments :
Post a Comment