இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களை பார்வையிட வந்த அதிகமான மக்கள் தொகை என இந்நிகழ்வானது வரலாற்றுப் பதிவாகியுள்ளது. பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள், புதிய புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்க செயல்பாடுகள், வர்த்தக உரிமம், புத்தக கண்காட்சி என்பவற்றை மக்கள் பார்வையிட்டதோடு மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டு போட்டி நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றதுடன் பல்துறை சார் பேராசியர்களால் வெளியீடு செய்யப்பட்ட 4 இற்கும் மேற்பட்ட நூல் வெளியீடுகளும் இடம்பெற்றது.
இதன்போது பிராந்தியத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் சாரை சாரையாக வந்து கலந்து கொண்டிருந்தனர். அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டு, கலை நிகழ்வுகளில் அவர்களையும் பங்குகொள்ள செய்யும் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.
புத்தாக்கமாக சிந்திக்கும் மாணவ செல்வங்களை ஊக்குவிக்கும் முகமாக அனைத்து பீடங்ககளும் தங்களது பங்களிப்பை பாரியளவில் வழங்கியிருந்ததுடன் சமூகத்துக்கு பயன்தரும் விடயங்களில் களம் அமைத்துக்கொடுக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் வருகை தந்த மக்களால் பெரிதும் சிலாகித்து பேசப்பட்டன. அத்தோடு பல்கலைக்கழகத்தின் தரைத்தோற்ற எழிலும் வனப்பும் மக்களால் பெரிதும் வியந்து பார்க்கப்பட்டது. மேலும் கலை நயத்துடன் கம்பீரமாக காட்சி தரும் கட்டிட வடிவமைப்புகளை கண்டு மக்கள் வியந்து நின்றனர்.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பல்கலைக்கழகம் பற்றிய தேடல் மற்றும் கற்றல் ஆர்வம் தொடர்பிலும் புதிய உற்சாகமும் ஊக்கமும் பிறக்க வழி ஏற்பட்டுள்ளதாக அங்கு வருகை தந்திருந்த மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்டு 27 வருட பூர்த்தியை சிறப்பிக்கு முகமாக அனைத்து செயல்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பற்றிருந்தன. விஷேடமாக இந்த பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் அதனை ஸ்தாபித்த மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரப்பை அவர்களின் புதல்வரை அழைத்துவந்து மகுடம் சூட்டி வரவேற்கப்பட்டமை குறித்தும் பல சமூக ஆர்வலர்களும் புத்திஜீவிகளும் நன்றியினையும் தெரிவித்திருந்தனர்
உபவேந்தராக தான் பொறுப்பேற்றதில் இருந்து மக்களுடன் இணைக்கும் பணியினை பேராசிரியர் றமீஸ் அபூபக்ககர் அவர்களின் வேலைத்திட்டம் வெற்றிகரமாக செயல் வடிவம் பெற்றுள்ளதுடன் எதிர்காலத்தில் இதனை விடவும் சிறப்பாகவும் நன்கு திட்டமிட்ட அடிப்படையிலும் ஒருங்கிணைக்க புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
0 comments :
Post a Comment