திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் பிரிவின் ஏற்பாட்டில் வெருகல் பிரதேச செயலக பிரிவின் பூமரத்தடி சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் வறிய குடும்பமொன்றில் வாழும் மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சக்கர நாற்காலி இன்று (23) வழங்கி வைக்கப்பட்டது.
இவர்கள் இன்னொருவரின் உதவியின்றி நடக்க முடியாத நிலையில் உள்ளனர். நாகரட்ணம் கபில்ராஜ், நாகரட்ணம் ஆனந்தராஜ், நாகரட்ணம் பிலோஜன் என்பவர்களுக்கே சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டது.
இவர்களுக்கான உதவியை திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன் உதவியுடன் நாளை (24) பிறந்த நாளை கொண்டாடும் மாணிக்கம் ரவி சங்கர் என்பவர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் மாவட்ட செயலக சமூக சேவைகள் பிரிவு தெரிவித்துக் கொண்டது.
0 comments :
Post a Comment