காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் சர்வதேச சிறுவர்,முதியோர் தின நிகழ்வு.


எம்.ஏ.ஏ.அக்தார்-

காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தில் சர்வதேச சிறுவர் முதியோர் தின வைபவம்

காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தில் சர்வதேச சிறுவர் முதியோர் தின வைபவம் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் தலைவி திருமதி சல்மா ஹம்ஸா தலைமையில் காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பக மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் பிரதம விருந்தினராக மனிதாபிமன செயற்பாட்டாளர் திருமதி ஸீனத்துன் னிஸா யூனுஸ் நௌசாத் கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் திருமதி ரிஸ்வானி ரிபாஸ் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர். முனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.அஸீஸ், காத்தான்குடி காதி நீதிபதி சட்டத்தரணி ஏ.முகம்மட் றூபி உட்பட பிரமுகர்கள் அதிகாரிகள், சிவில் சமூக பிரதி நிதிகள் காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பக பணிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சிறுவர்;களின் பல் வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் அதிதிகளுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :