உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு குடியிருப்புகளில் வீட்டு முகாமைத்துவம் தொடர்பான கையேடு!



லக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு குடியிருப்புகளில்; வீட்டு முகாமைத்துவம் தொடர்பான கையேடு இன்று (04) மாளிகாவத்தை சௌஸா விழா மண்டபத்தில் வெளியிடப்பட்டது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தலைமையில் நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் (திட்டமிடல் மற்றும் முன்னேற்றம்) ரோஹன பல்லேவெல இதனை எழுதியுள்ளார்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் 25 பேருக்கு பாடசாலை உபகரணங்களும்> குறைந்த வருமானம் பெறும் 40 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 10>000 ரூபா பெறுமதியான போசாக்குப் பொதிகளும்; செவன உதவித் திட்டத்தின் கீழ் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இரண்டு பிரதான வீடமைப்பு உதவித் தொகை மற்றும் உங்களுக்கு வீடு – நாட்டிற்கு நாளை வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் 05 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான 08 காசோலைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

01. புகைப்படம் - உலக குடியிருப்பு தினத்துடன் இணைந்து, குடியிருப்புகளில் வீட்டு முகாமைத்துவம் தொடர்பான கையேட்டை பிரதிப் பொது முகாமையாளர் (திட்டமிடல் மற்றும் முன்னேற்றம்) ரோஹன பல்லேவெல தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ராஜீவ் சூரியஆரச்சியிடம் வழங்கிய போது பிடிக்கப்பட்ட படம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :