அஸ்ஹர் இப்றாஹிம்-
மாணவர்களிடையே தலைமைத்துவ பண்பு மற்றும் ஆளுமையை கட்டியெழுப்பும் செயலமர்வொன்று கல்முனை அஸ் ஸுஹரா வித்தியாலயத்தில் கடந்த வியாளன் (25) இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா மனிதவள மேம்பாட்டு அமைப்பு ஒழுங்கு செய்திருந்த மேற்படி நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு இருக்க என்ன பண்புகள் , பிணக்குகளை தீர்த்து வைக்கும் யுக்தி, ஒற்றுமையினால் ஏற்படும் நன்மைகள், கேட்டல் மற்றும் கிரகித்தல் தொடர்பான விடயங்களை வளவாளராக கலந்து கொண்ட கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி ஆசிரியரும், மனித மேம்பாட்டு அமைப்பின் ஆலோசகருமான மேஜர் கே.எம்.தமீம் மாணவர்ளுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவத் தலைவர்கள், ஒழுக்காற்றுக் குழு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment