திருக்கோவிலில் பனை விதைகள் நடும் வேலைத்திட்டம் !


வி.ரி.சகாதேவராஜா-

திருக்கோவில் பிரதேசத்தில் பனை விதைகள் நடும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த வேலைத்திட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இத் திட்டமானது பனை சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ள தேவையான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ள பனைசார்ந்த உற்பத்தி கிராமங்களை உருவாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நிதியினை பனை அபிவிருத்தி சபையினால் ரூபாய் 75000 ஒதுக்கப்பட்டிருகின்றது.

குறித்த வேலைத்திட்டத்திற்க்கா ஆரம்பகட்ட நிகழ்வு தம்பட்டை 01 ,02 பகுதிகளின் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் க. சதிசேகரன் , பனை அபிவிருத்தி சபையின் மட்டு அம்பாறை மாவட்ட முகாமையாளர் ரி.விஜயன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தினை திருக்கோவில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உசாந்தின் ஆலோசனைக்கு அமைய அபிவிருத்தி உத்தியோகத்தர்
சு. ரவீந்திரனால் ஒழுங்கு படுத்தி நிகழ்த்தப்பட்டுள்ளது....

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :