அஷ்ரப் ஏ சமத்-
இந்திய லோகா சபா தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மற்றும் இந்திய முஸ்லிம் லீக் உப தலைவர் மற்றும் ஊடகவியலாளர் சாrஹூல் ஹமீட் ஆகியோர் 29 கொழும்பில் நடைபெறவுள்ள அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனத்தின் 50ஆவது பொன்விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று கொழும்பு வந்திருந்தனர்.
நேற்று 28. கொழும்பில் தங்கியிருந்த இந்திய பிரநிதிகள் இலங்கை வெளிநாட்டு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரனி அலி சப்றியை அவரது கொள்ளுப்பிட்டியில் வைத்து சந்தித்தனா்
இச் சந்திப்பின்போது அன்மையில் தமிழ் நாட்டு மீனவர்கள் 27 பேரை வடக்கில் இலங்கைப் கடற்படையினர் கைது செய்து விளக்க மறியலில் வைத்து்ளளனர்.
இவர்களை விடுதலை சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பிணர் நவாஸ்கனி அமைச்சர் அலி சப்றியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவர்களது விடுதலை சம்பந்தமாக உரிய அதிகாரிகள் ஊடக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உடனடியாக விடுதலை செய்வதற்காக முயற்சிப்பதாக அமைச்சர் கூறினார். இரண்டு நாடுகள் இணைந்து வடக்கில் மீன்பிடியாளர்களது பிரச்சினைக்கு ஒர் சுமுகமாக தீர்வைப் பெற்றுத் த ருமாறும் பாராளுமன்ற உறுப்பிணர் நவாஸ்கனி வேண்டிக் கொண்டார்.
0 comments :
Post a Comment