கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் முதியோர் தினம்.



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மற்றும் பிரதேச முதியோர் சம்மேளனம் என்பன இணைந்து ஆரோக்கியமிகு அகவையினை நோக்கி உலகளாவிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான மனித உரிமைகளை நடைமுறைகள் கடந்து நிறைவேற்றுதல் எனும் தலைப்பிலான முதியோர் தின நிகழ்வு நேற்று முன்தினம் (10.10.2023) செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கிழக்கு பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி, பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார், நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.தாஹிர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பஷீர், சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.நிலுஜா, பிரதேச முதியோர் சம்மேளன தலைவர் பி.எம்.எம்.இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது முதியோருக்கான அறிவுக்களஞசியம், பலூன் உடைத்தல், கலர் தெரிவு செய்தல், தொப்பி மாற்றுதல் போட்டிகள் வைக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் 90 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளும் சமுக சேவைகளில் ஈடுபட்ட சிரேஷ்ட பிரஜைகளும் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசில்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :