சர்வதேச ஆசிரியர் தின அன்பளிப்புப் பொருட்களுக்கு தடை ! சாய்ந்தமருது அதிபர் ஒருவரின் முன்மாதரி!!



ன்பின் பெற்றோருக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ.
வருடா வருடம் ஒக்டோபர் 6 ஆந் திகதி எமது நாட்டில் ஆசிரியர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றன. இத்தினத்தில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தனியாகவும், குழுக்களாகவும் அன்பளிப்புப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இதனால் வகுப்பறைகளில் வறிய மாணவர்கள் பல்வேறு விதமான மன உளைச்சலுக்கும் சவால்களுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் முகங்கொடுக்கின்ற அதேவேளை இன்றைய பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும் மத்தியில் பெற்றோர்களாகிய நீங்களும் பல சங்கடங்களுக்கு உட்படுகின்றீர்கள்.
எனவே, கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கோ அல்லது அதிபருக்கோ எந்தவிதமான அன்பளிப்புப் பொருட்களையும் இரகசியமாகவோ அல்லது பரகசியமாகவோ வழங்குவதற்கு பாடசாலை முகாமைத்துவக் குழு தடைவிதித்துள்ளது.
ஆகவே, பெற்றோர்களாகிய நீங்கள் ஆசிரியர் தினத்திற்காக உங்களது பிள்ளைகளிடத்தில் பணமாகவோ அல்லது பொருளாகவும் எதனையும் கொடுத்து அனுப்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுகிகொள்கின்றேன். அவ்வாறு மீறி அனுப்பிவைக்கும் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்களது ஆசிரியர் தின அன்பளிப்புக்கள் எமது ஆசிரியர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும் நீடித்த ஆயுளுக்காகவும் பிரார்த்தனைகளாக அமையட்டும்.

அதிபர்
ஜீ.எம்.எம்.பாடசாலை
சாய்ந்தமருது


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :