அஸ்ஹர் இப்றாஹிம்-
விஷேட தேவையுடையோர்களை சமூகமயப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு சிறந்த சமூக மனப்பாங்கினை கட்டியெழுப்புதல் சம்பந்தமாக சமூகத் தலைவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வொன்று அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அம்பாறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சமாதி அகலதொடுவ தலைமையில் நடந்த மேற்படி நிகழ்வில் சிரேஷ்ட உளவியல் ஆலோசகர் சுணில் குணரெட்ண கலந்து கொண்டார்.
டச் லங்கா பிரனட்சிப் பெளண்டேசனுடன் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஊனமுற்றோரின் சட்ட நிலை, அவர்கள் பெறும் சேவைகள், தொடர்பு செயல்முறை சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள கரங்காவ, கெமுனுபுர, திஸ்ஸபுர, நவகம்புர, மிஹிதுபுர, சத்தாதிஸ்ஸபுர ஆகிய கிராம சேவகர் பிரிவிலுள்ள விஷேட தேவையுடையோர்கள் தொடர்பாக இந்த செயலமர்வில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சமூக சேவை அலுவலகர்கள், கிராம சேவை உத்தியோஸ்தர்கள் மற்றும் சமூக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment