தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களுக்கான திறன் அபிவிருத்திக்கான மூன்று நாள் வதிவிட பயிற்சி



நூருல் ஹுதா உமர்-
ளைஞர் விவகார விளையாட்டு அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஒழுங்கு செய்த கிழக்கு மாகாண உத்தியோத்தர்களுக்கான திறன் அபிவிருத்தி வளர்ப்பது சம்பந்தமான மூன்று நாள் வதிவிட பயிற்சிநெறி கிழக்கு மாகாணப் பணிப்பாளர் சரத் சந்திரபால தலைமமையில் மட்டக்களப்பு சத்துருகொண்டான் சர்வோதய கல்வி பயிற்சி நிலையத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாக பணிப்பாளர் மனுல சமல் பெரேரா அவர்களும், விசேட அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பயிற்சி பிரதிப் பணிப்பாளர் விறாஜ் கபில, நிருவாக பிரிவு உதவிப் பணிப்பாளர் நிர்மலி, கிழக்கு மாகாண கணக்காளர் சஜித் குனசேகர, நிர்வாக உத்தியோகத்தர் பி.தியாகராஜா, மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி கலாராணி ஜெயசுதாசன் மற்றும் உயர் தொழிநுட்ப கல்லூரி பணிப்பாளர்ஜெயபாலன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

மேலும் வளத்திறன் மிக்க நிலைத்து நிற்கக் கூடிய சமுதாயத்தில் அபிவிருத்தியுடன் வாழ்வதற்கு தேவையான அறிவு திறன் விழுமியம் மற்றும் மனப்பான்மை அனுகுமுறைகள் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இப் மூன்று நாள் வதிவிட பயிற்சி நெறியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :