கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் மத்திய முகாம் வைத்தியசாலைக்கு விஜயம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், பிரதி பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித், திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம். மாஹிர், மற்றும் உயிரியல் மருத்துவ பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

குறித்த வைத்தியசாலை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அபிப்பிராயங்கள் மற்றும் முறைப்பாடுகளை பரிசீலிப்பதற்காகவும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதற்காகவும் குறித்த குழுவினர் இன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர்

இதன்போது கலந்துரையாடலில் ஈடுபட்ட மேற்படி குழுவினர் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தனர்.
மேலும் மத்திய முகாம் வைத்தியசாலையில் நீண்ட காலத் தேவையாக இருந்த Multipara Monitor ஒன்றினையும் இதன் போது பணிப்பாளர் அவர்கள் வழங்கி வைத்தார்.
வைத்தியசாலை அபிவிருத்தி நலன் கருதி வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினை மறுசீரமைப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :