கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் மீளப்புனரமைக்கப்பட்ட விபுலானந்த மணிமண்டபம் நேற்று(11) புதன்கிழமை காலை அதிபர் திருமதி விஜயசாந்தினி நந்தபால தலைமையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
அதிதிகளாக சிவஸ்ரீ சச்சிதானந்தசிவக்குருக்கள் , கல்முனை வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன், கோட்டக்கல்விப்பணிப்பாளர் ச.சரவணமுத்து, உதவி கல்வி பணிப்பாளர்களான ஆ.சஞ்சீவன் வி.ரி.சகாதேவராஜா கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான
சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டவர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.
முன்னதாக அதிதிகள் பாண்ட்வாத்தியம், தமிழ் இன்னியம் சகிதம் வரவேற்கப்பட்டு பின்னர் மண்டப பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து நாடாவெட்டி விபுலானந்த மணி மண்டபம் திறந்துவைக்கப்பட்டது.
மாணவர்கள் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் மேடையேறின. அதிதிகள் பாராட்டப்பட்டனர்.செயற்பாட்டாளருமான சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டவர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள். அதிதிகள் பாராட்டப்பட்டனர்.
கடந்த 5 வருடங்களாக விபுலானந்தா மணி மண்டபம் பழுதடைந்த நிலையில் இருந்த வேளையில், கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜனின் வேண்டுகோளுக்கிணங்க லண்டனில் வாழும் பாண்டிருப்பைச்சேர்ந்த திருமதி வனிதா இராஜகுமார் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபத்தை மீள அமைத்துக் கொடுத்திருந்தார்.
மாணவர்கள் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடையேறின.
0 comments :
Post a Comment