கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகபூர்வ இணையதளம் இன்று (23) திங்கட்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் சுகாதார தகவல் முகாமைத்துவப் பிரிவு குறித்த இணையதளத்தினை வடிவமைத்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்திருந்தது.
சுகாதார தகவல் முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எம்.முஜீப் அவர்களினால் இணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்கள் இணையதளத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரிவுத் தலைவர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment