இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநரின் பிரதிநிதியாக ஆளுநரின் செயலாளர் எல்.பி. மடநாயக்க அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
ஆளுநரின் செய்தியை திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரும் ஆளுநரின் மேலதிக செயாலாலருமான ஏ.எஸ்.எம் பயாஸ் வாசித்தார்.
பேராசிரியர் ஏ.எல் அப்துல் றவூப் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து நூல் விமர்சன உரையை பேராசிரியர் எம்.பி.எம். இஸ்மாயில் அவர்களும் பல்கலைக்கழக வணிக மையம் தொடர்பில் கலாநிதி எம்.என்.ஏ. ஹினாஸ் அவர்களும் நிகழ்த்தினர்.
நிகழ்வுக்கு விஷேட பேச்சாளராகவும் விஷேட அதிதியாகவும் பேராசிரியர் துசித அபேதுங்க அவர்கள் கலந்துகொண்டு விஷேட உரையாற்றினார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட அதேவேளை நூலின் பிரதிகளை அதிதிகளுக்கும் கௌரவமாக அழைக்கப்பட்டவர்களுக்கும் வழங்கிவைத்துடன் ஜி.எஸ்.லாணி மௌஸ்டீன் நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் பீடாதிபதிகள்,பேராசிரியர்கள், பதிவாளர், நிதியாளர்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் அதிகாரிகள், பிரதி திட்டமிடல் அதிகாரிகள், நிறுவனங்களின் தலைவர்கள், அவைகளின் பிரதிநிதிகள், தனியார் துறைகளைச் சார்ந்த பிரதிநிதிகள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment