எம்.எம்.றம்ஸீன்-
ஈ.டீ.எப்.நிறுவனம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட வினாப்பத்திரங்கள் ,கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து அரசாங்க பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களை மாவட்ட ரீதியில் கெளரவித்து பரிசளிப்பு விழாக்களை பல வருடங்களாக பிரமாண்டமாக நடாத்தி வருகின்றது.அந்த வரிசையில் 2022 ஆம் ஆண்டு தகைமை பெற்ற அம்பாரை மாவட்ட புலமையாளர்களை பாராட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளரும் ,தற்போதைய தேர்தல்கள் மறுசீரமைப்பின் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர் .A.L.M.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
0 comments :
Post a Comment