மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொருளாளரும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினருமான எம்.ஐ.எம். வலீதின் அழைப்பிற்கிணங்க கல்முனை கல்வி வலய மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரிக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு.ஜி.திஸாநாயக்க குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாடசாலை முகாமைத்துவ சபையுடன் கலந்துரையாடினார்.
மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொருளாளரும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினருமான எம்.ஐ.எம். வலீத் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, மாகாண கல்வித் திணைக்களத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற குறித்த நிதி தொடர்பிலான ஆவணங்கள் பாடசாலை முகாமைத்துவத்தினரின் முன்னிலையில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு.ஜி.திஸாநாயக்க அவர்களினால் பாடசாலை அதிபர் ஐ.உவைத்துல்லாவிடம் பாடசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.
மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி அதிபரின் வேண்டுகோளின் பேரில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களின் சிபாரிசின் அடிப்படையிலும் பழைய மாணவர் சங்க பொருளாளரும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினருமான எம்.ஐ.எம். வலீத் முன்னெடுத்த இந்த நிதி பெறுகை மூலம் பாடசாலையில் அவசரமாக திருத்தவேண்டியும், புனரமைக்க வேண்டியும் இருந்த கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டது.
பாடசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து பாடசாலையின் குறைநிறைகளையும், கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்களையும், அடைவுமட்ட உயர்வுக்கான வழிவகைகளையும், பௌதீக தேவைகள் தொடர்பிலும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு.ஜி. திஸாநாயக்க பாடசாலை முகாமைத்துவத்தினருடன் விரிவாக கலந்துரையாடினார். உயர்தரப் பிரிவிற்கான ஆசிரிய ஆளணி மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்ட கல்வி அமைச்சின் செயலாளர் அவர்கள், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளருடன் கலந்துரையாடி உள்ளகரீதியாக ஆசிரிய சமப்படுத்துகையினை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.
இவ்வேளையில் குறித்த நிதி கிடைக்க காரணமாக இருந்த பழைய மாணவர் சங்க பொருளாளரும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினருமான எம்.ஐ.எம். வலீத், வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம், வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், கல்வி மாவட்ட பொறியலாளர் ஏ.எம். சாஹீர், மாகாண கல்வித்திணைக்கள பிரதம கணக்காளர் ஏ.எம். றபீக், கிழக்கு மாகாண முன்னாள் கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு.ஜி.திஸாநாயக்க உட்பட பலருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்தது.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் ரி.எம்.றிஹான் மற்றும் கல்லூரியின் பிரதி அதிபர்கள் உள்ளிட்ட முகாமைத்துவ சபை உறுபினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment