மாவனல்லை நகர அபிவிருத்தி திட்டம் புதுப்பிக்கப்படும்...
உடனடியாக தொடங் குவதற்கான நடவடிக்கைகள்...
இது 2023-2033 வரை செயற்படுத்தப்படும்...
மாவனல்லை நகர அபிவிருத்தித் திட்டம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் ஆரம்பிக்கப்படும். இது 2023-2033 முதல் பத்து ஆண்டுகளில் செயல்படும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
பாராளுமன்ற வளாகத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இன்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மாவனல்லை நகர அபிவிருத்தித் திட்டம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் ஆரம்பிக்கப்படும். இது 2023-2033 முதல் பத்து ஆண்டுகளில் செயல்படும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
பாராளுமன்ற வளாகத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இன்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சில அபிவிருத்தி திட்டங்களில் சிக்கல் நிலைகள் காணப்படுவதாக குறிப்பிட்டார். இப்பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டுமெனவும், இல்லையெனில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரால் நகர அபிவிருத்திப் பகுதியாக அறிவிக்கப்பட்ட எந்தப் பகுதிக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையானது அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்து அதனை நடைமுறைப்படுத்த கடமைப்பட்டுள்ளது. இது 1978/ 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உள்ளது.
அதன்படி, 1999 முதல் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் எண்ணிக்கை 69 ஆகும். அந்த அதிகாரசபையினால் 273 பிரதேசங்களை நகர அதிகார வரம்புகளாக அறிவித்துள்ளது. அவற்றில் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 208 பிரதேச சபைகள் உள்ளன.
மாவனல்லை உள்ளூராட்சி சபைக்குட்பட்ட பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான அபிவிருத்தித் திட்டத்தை 2004 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபை தயாரித்து வர்த்தமானியில் வெளியிட்டதுடன் அதன் பதவிக்காலம் 2020 இல் முடிவடைந்தது. அதன் பின்னர், புதிய திட்டம் ஒன்றின் தேவையின் பேரில், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மாவனல்லை பிரதேச சபை அபிவிருத்தி சாத்தியம் மற்றும் சுற்றாடல் உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டு முழு பகுதியையும் உள்ளடக்கியது. இந்த புதிய அபிவிருத்தி திட்டம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளது.
மாவனல்லை நகர அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கு "மேற்கு சரிவின் பசுமை செழிப்பு மையம்" ஆகும். இந்தத் திட்டம் பொருளாதார மற்றும் சுற்றுலா அபிவிருத்தி, நிலையான சுற்றுச்சூழல் அபிவிருத்தி, காணி மற்றும் கட்டிட அபிவிருத்தி மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றின் முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள மாவனல்லை வரலாற்று மதிப்புமிக்க மக்கள்தொகை கொண்ட நகரமாகும். இதன் அளவு 119 சதுர கிலோமீட்டர். கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை 71 ஆகும். இங்கு முக்கியமாக இறப்பர் தோட்டமும் மற்றும் முக்கிய நில நுகர்வாக விவசாயமும் செய்கிறார்கள்.
இந்நிகழ்வில் மாவனல்லை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இந்துனில் சாந்த குணசேன, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்யானந்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், அதன் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானாராச்சி, பிரதி பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) எம்.பி. ரணதுங்க மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment