கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த மீலாதுன் நபி விழா இன்று வியாழக்கிழமை (12) மாநகர சபை முன்றலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மெளலவி ஷபா முஹம்மத் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
இதில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுச் சந்தை வர்த்தகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி மற்றும் மெளலவி ஷபா முஹம்மத் ஆகியோரின் உன்னத சேவைகளைப் பாராட்டி, அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் மீலாத் கந்தூரி அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.
விழா நிகழ்வுகளை மாநகர சபையின் வருமானப் பரிசோதகர் சமீம் அப்துல் ஜப்பார் நெறிப்படுத்தியிருந்தார்.
0 comments :
Post a Comment