மூலதனச்சந்தை திறந்த வினா விடைப்போட்டிச் சமரில் தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடம் முதல் இரண்டு இடங்களை சுவீகரித்தது!



லங்கை பங்குப்பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்கு பரிவர்த்தனை (CSE) இணைந்து மூலதனச் சந்தை திறந்த போட்டிச் சமரினை நாடுதழுவிய பல்கலைக்கழக ரீதியில் நடாத்தி வருகிறது. அந்த வகையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழக பிரதான கேட்போர் கூடத்தில் இன்று  ( 2023.10.19) வியாழக்கிழமை இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பீடங்களுக்கிடையிலான மூலதனச்சந்தை திறந்த வினா விடைப்போட்டிச் சமர் 2023 நிகழ்வில் ஐந்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு கொண்டனர். இதில் கலை கலாச்சார பீடம் முதலாம் இரண்டாம் இடங்களை தனதாக்கிக் கொண்டது.

பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா அவர்களின் தலைமையில், முகாமைத்துவ பீட நிதியியல் பிரிவு விரிவுரையாளர் எம்.சிறாஜி அவர்களின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக இலங்கை பங்குபரிவர்த்தணை ஆணைக்குழு சார்பாக நிரோஷன் விஜேசுந்தர (Senior Vice President- Marketing ,CSE) அவர்களும், சஜீவனி பக்மெடினிய ( Senior manager, Capital Market Education ,SEC ) அவர்களும், நிமல் குமாரசிங்க - Manager, External Relations , ஆர்.எம். சிவநாதன் - Manager, Batticaloa Branch ஆகியோரும் பங்கு கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வு பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள், பதிவாளர், நிதியாளர், கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

நிகழ்வின் வரவேற்பு உரையை பேராசிரியர் ஏ.எம்.எம்.முஸ்தபா நிகழ்த்தினார். அறிமுக உரை கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் சிரேஷ்ட உப தலைவர் நிரோஷன் விஜேசுந்தர நிகழ்த்தினார். அவ் உரையில் இலங்கை பொருளாதாரத்தில் பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் பங்களிப்பு மற்றும் போட்டி தொடர்பான விதிமுறை என்பன விளக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதம அதிதி உரையை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அவர் தனது உரையில்,

இலங்கை மூலதன சந்தையானது எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிரந்தர அபிவிருத்தியின் முக்கிய உந்து சக்தியாக அமைவதுடன் , இன்றைய இளைஞர் சமூகம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மூலதன சந்தை தொடர்பான அறிவு , மற்றும் போட்டி சந்தை ஆய்வு தொடர்பான பல தகவல்களை வழங்குகின்றமை எமது தேசத்திற்கு மிக முக்கியமான பங்ககளிப்பாகும். அந்தவகையில் இலங்கை பங்குபரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) மற்றும் கொழும்பு பங்கு பரிவர்த்தனை (CSE) இணைந்து நடாத்தப்படும் திறந்த வினா விடை போட்டி சமர் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களில் ரீதியில் நடாத்துவது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் எமது நாட்டின் மாணவர் சமுதாயத்தின் அறிவு, திறன் விருத்திக்கு மிக முக்கியமான பங்ககளிப்பாகும், என தனது உரையில் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் பீடங்களுக்கிடையிலான மூலதனச்சந்தை திறந்த போட்டிச் சமர் இடம்பெற்றது.

மேலும் இந் நிகழ்வானது பீடங்களுக்கிடையிலான 15 குழுக்களுக்கிடையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் முதலாம் இடத்தை கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பொருளியல் துறை அணிகள் முதலாம், இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டதுடன் ரூபா 75000/- பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டது.

மூன்றாம் இடத்தினை தொழில்நுட்ப பீடம் பெற்றுக் கொண்டது. மேலும் தெரிவு செய்யப்பட்ட 20 பார்வையாளர்களுக்கான பரிசும் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் குறித்த திறந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் அணி தேசிய ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான இலங்கை பங்கு பரிவர்த்தனை நடாத்தும் மூலதனச் சந்தை திறந்த வினாவிடைப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டமை சிறப்பம்சமாகும்.

மேலும் இப்போட்டியானது மாணவர்களுக்கிடையில் மூலதனச் சந்தை தொடர்பான அறிவு அத்தோடு நிதி, பொருளாதாரம், பொழுது போக்கு, விளையாட்டு ரீதியான அறிவினை மேம்படுத்தவும், விருத்தி செய்யவும் இத் திறந்தபோட்டி பிரதான பங்குவகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியாக, நன்றி உரை முகாமைத்துவ பீடத்தின் பேராசிரியர் ஏ.எல்.ஏ.றவூப் அவர்களால் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
























































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :