சுற்று சூழல் அமைப்புகள், மற்றும் பாதுகாப்பான வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கான சமூக அடிப்படையிலான அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாடு CBID நடைமுறைகள் எனும் திட்டத்திற்கமைய
இன்று YMCA நிறுவனத்தினர் CBM நிதி வழங்குனரின் அனுசரணையில் தன்னாமுனை மியானி மண்டபத்தில் மாற்று திறனாளிகள் மற்றும் பெண் தலமை தாங்கும் குடும்ப பயனாளிகளுக்கான மூன்று நாள் வாழை மடல் மூலமான உற்பத்தி பொருட்களுக்கான பயிற்சி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் YMCA. நிறுவனத்தின் பிரதி பொது செயலாளர் திரு பற்றிக், திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. கெளசிகன்,அரச உத்தியோகத்தர்களாக மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு. அருள்மொழி ,ஏறாவூர் விவசாய போதனாசிரியர் மு.ஹ.முர்ஷிதா ஷிரீன், மண்முனை வடக்கு பிரதேச செயலக சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பிரசாந்தி, மற்றும் மாவட்ட செயலக. சுற்றுலா அபிவிருத்தி உத்தியோகத்தர் விவேகானந்த ராஜா ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் நஜுமுதீன் போன்றோர் அதிதிகளாக வரவேற்கப்பட்டு இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
அதிதிகளின் ஆக்கபூர்வமான பொலித்தீன் பாவனையை குறைப்பதற்கான உரையாற்றல்களை தொடர்ந்து மதிய போசணத்துடன் இனிதே நிறைவுற்றது. தொடந்து பயனாளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment