சாய்ந்தமருதில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த
சாய்ந்தமருது 08ம் பிரிவின் சிவில் பாதுகாப்பு குழுவின் ஒன்றுகூடல் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பரிசோதகர் வை.பி. அய்யூப் தலைமையிலும் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ். அக்பர் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் சாய்ந்தமருது அல்-ஜலால் பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது 08ம் பிரிவின் கிராம நிலதாரி எ. நஜீபா, சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் அபுல் ஹசன், உப தலைவர் எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம், நிர்வாக உத்தியோகத்தர்கள், பொதுநிறுவன தலைவர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது தற்காலத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் குற்றங்கள் இதனால் ஏற்படும் பாதிப்புகள் என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment