இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வரும் Metro Politan college ன் தவிசாளரும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் A.J. நுஸ்ரத் பானு அவர்களும் விசேட அதிதிகளாக கமு/கமு/லீடர் அஸ்ரப் வித்தியாலய அதிபர் M.I.சம்சுதீன் அவர்களும் , கமு/கமு/ஜீ.எம்.எம்.எஸ்.வித்தியாலய அதிபர் M.I.M. இல்லியாஸ் அவர்களும் , முன்னாள் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் M.M.இஸ்மாயில் அவர்களும் ,கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் M.M.றபீக் அவர்களும், சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி முகாமையாளர் ரியாத் ஏ மஜீட் அவர்களும், இக்கல்லூரியின் அதிபர் செல்வி N.பாத்திமா சனோபர் அவர்களும் ஆசிரியர்களும் பெருமளவிலான பெற்றோர்களின் பங்களிப்புடனும் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள் ஆங்கில கல்வியின் முக்கியத்துவம் பற்றி விசேட உரையொன்றை நிகழ்த்தினார் அவர் அங்கு உரையாற்றுகையில் போட்டி நிறைந்த இந்த உலகத்தில் ஆங்கிலத்தில் எழுத,வாசிக்க,பேச ஒரு மனிதனால் முடியாவிட்டால் அவனால் எந்த விடயங்களையும் செய்ய முடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்கு ஆழாகிவிடுவான் ஆதலால் இங்குள்ள பெற்றொர்கள் கட்டாயம் ஆங்கில அறிவையும் கணிணி அறிவையும் உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் அதற்கான களங்களை அமைத்துக் கொடுக்கும் இது போன்ற பாடசாலைகளுக்கு இங்குள்ள அதிபர்கள்,ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் தனவந்தர்கள் ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும் முன்னாள் முதல்வர் அவர்கள் தமதுரையில் உங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்த்துக் கொள்ளுங்கள் இன்று எமது பிரதேசங்களில் மாணவர்கள் போதைப் பாவனையின்பால் ஈர்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் அதிலிருந்து உங்களது பிள்ளைகளை பாதுகாத்துக் கொல்லுங்கள்
உங்களது பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்குங்கள். O/L , A/L சித்தியடையவில்லை என்றால் கவலைப்படாதீர்கள் அதற்கேற்றவாறு அவர்களை பயிற்று வித்து டிப்ளோமா தொடக்கம் கலாநிதி வரை செல்லக்கூடிய கல்வியை வழங்கக் கூடிய அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களை நாங்கள் தலைநகரில் 25 வருடங்களாகவும் ,கல்முனையில் 05 வருடங்களாகவும் நடாத்திக் கொண்டு வருகின்றோம் அவற்றில் கற்று பயன் பெற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளோம் எனக் கூறுவதுடன் ஆங்கிலத்தில் போதிக்கும் இக்கல்லூரி மென்மேலும் வளர வேண்டும் என வாழ்த்துவதோடு அதற்கான ஒத்துழைப்பை பெற்றோர்களாகிய நீங்கள் வழங்க வேண்டும் எனக்கூறுவதுடன் என்னையும் பிரதம அதிதியாக இந்நிகழ்வுக்கு அழைத்தமைக்காக இக் கல்லூரியின் நிர்வாகத்தினருக்குகு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.
இறுதியாக பிரதம அதீதி, கௌரவ அதிதி, விசேட அதிதி ஆகியோரால் மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதல்களும் வழங்கிவைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment