எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் ஜேபி-
உலக வங்கியின் கடனுதவித்திட்டத்தினூடாக செயற்றிட்டங்களை அமுல்ப்படுத்துவதற்காக கருத்திட்ட முன்மொழிவுகளை 01ம், 2ம் கலந்துரையாடல்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னுரிமைப்பட்டியலாகத் தயாரிக்கும் இறுதிக் கலந்துரையாடலானது இன்று 12.10.2023ம் திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கோறளைப்பற்று பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பிரதேச சபைச்செயலாளர் எஸ்.நவநீதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது, கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சகல சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள், ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதேச சபை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
திட்ட முன்மொழிவுகள் தொடர்பான விளக்கங்களை
சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல்லா ஹாரூன் தெளிபடுத்தினார்.
0 comments :
Post a Comment