அஸ்ஹர் இப்றாஹிம்-
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் கண் நோய் மிகவும் விரைவாக பரவி வருவதால் கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் கேட்டுள்ளார்.
கல்முனை பிராந்தியத்தில் தற்போது பாடசாலை மாணவர்கள்,சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு கண் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கண் நோயினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களை பெற்றோர் பாடசாலைக்கு அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுப்புவதையும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சஞ்சரிப்பதனையும் தவிர்த்து கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
கண் நோய் தொடர்பாக பிரதேசங்களிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் ஊடாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ப்பட்டுள்ளன.
தொற்று நோயாளிகளும்,பொது மக்களும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் வைத்திய ஆலோசனைகளைப் பெற்று அதற்கான சிகிச்சையையும் பெற்றுக் கொள்ளுமாறும் பணிப்பாளர் மேலும் கேட்டுள்ளார்.
கண் சிவத்தல், பார்வை மங்கல், கண்ணில் நீர் வழிதல், காய்ச்சல்,தலையிடி என்பன கண் நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும்.
0 comments :
Post a Comment