எம். என்.எம்.அப்ராஸ்-
பலஸ்தீன்,மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நிலவவும் நீதி நிலைநாட்டப்பட வேண்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளையின் ஏற்பாட்டில் நாளைய தினம் 23/10/2023 (திங்கட்கிழமை)அல்-மஸ்ஜிதுல் ஜாமிஃ கல்முனை நகர ஜும்ஆ பள்ளிவாசலில் அஸர் தொழுகையை தொடர்ந்து துஆ பிராத்தனை இடம்பெறவுள்ளதுடன்,அந்நாளில் நோன்பு நோற்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளை விடுத்துள்ள அறிவித்தலில் கடந்த சில தினங்களாக பலஸ்தீனில் நடைபெற்றுவரும் தாக்குதலின் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானவர்கள் காயத்துக்குள்ளாகியிருப்பதையும் நாம் அறிவோம்.
அல்லாஹு தஆலா உயிரிழந்தவர்களுக்கு உயர்வான சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸையும், காயமுற்றவர்களுக்கு விரைவாக பூரண சுகத்தையும் கொடுத்தருள்வானாக. பலஸ்தீன்,காஸா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நிலவவும் நீதி நிலைநாட்டப்படவும்இவ்வாறான நெருக்கடியான சோதனைகள் ஏற்படும் பொழுது அவை நீங்குவதற்கு அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் தொழுகை,நோன்பு,ஸதகா, தௌபா, இஸ்திஃபார் மற்றும் துஆ போன்ற நல்லமல்கள் மூலம் அவன் பக்கம் நெருங்க வேண்டும். வியாழன் மற்றும் திங்கட்கிழமை தினங்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.
இதற்கமைய நாளைய தினம் திங்கட்கிழமை
(23 /10/2023) நோன்பு நோற்று துஆ பிராத்தனையில் ஈடுபட வேண்டுமென்றும் அத்துடன் அன்றைய தினம் கல்முனை நகர அல் மஸ்ஜிதுல் ஜாமிஃ ஜும்ஆ பள்ளிவாசலில் அஸர் தொழுகையை தொடர்ந்து துஆ பிராத்தனை ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளை அறிவித்தல் விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment