மேலோட்டமாக சிந்திக்கின்றவர்கள் இஸ்லாமிய நாடுகளிடம் ஒற்றுமையில்லை என்பதுதான் இதற்கு காரணமென்று ஒரே வரியில் பதிலை கூறிவிடுகின்றனர். ஆனால் விடையம் அதுவல்ல.
புனித பாலஸ்தீன் மண்ணை மீட்டெடுக்கவேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களின் உள்ளத்தில் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலேயே பாரிய சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
உலகின் சக்திவாய்ந்த வல்லரசு நாடுகளின் பின்புலமின்றி யூத இனம் தனியே செயப்பட்டு வந்திருந்தால் அவர்கள் என்றோ காணாமல்போய் இருப்பார்கள். இவ்வளவு பெரிய நீண்ட போராட்டத்திற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது.
ஆனால் யூத தேசத்தினை உருவாக்கிய அமேரிக்கா, பிரித்தானிய போன்ற உலகின் பல சக்திவாய்ந்த வல்லரசு நாடுகள் யூதர்களுக்கு பின்னால் இருந்துகொண்டு இராணுவ, பொருளாதார உதவிகளை வாரி வழங்கிவருகின்ற காரணத்தினாலேயே போராளிகளுக்கு ஆதரவு வழங்குவதில் இஸ்லாமிய நாட்டு தலைவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படுகின்றது.
இன்று நடைபெற்றுவருகின்ற போரின்போது ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக ஹிஸ்புல்லாஹ் இயக்கம் அறிவித்ததன் பின்பு இந்த போரில் களம் இறங்கக்கூடாதென்று பிரான்சும், ஜெர்மனும் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்திற்கு அழுத்தம் வழங்கியது.
அதுபோல் ஹமாசுக்கு ஆதரவாக சிரியா போரில் குத்தித்தால் பசீர் அல்-அசாத் கொலை செய்யப்படுவார் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
மேலும் சவூதி அரேபியா, எகிப்து, கத்தார், துருக்கி போன்ற நாடுகள் ஹமாசுக்கு ஆதரவு வழங்குவதனை தடுக்கும் பொருட்டு வெளியுறவு அமைச்சகம் மூலமாக அமேரிக்கா இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
இது எதிரி நாடுகளை எச்சரிப்பதனையும், நட்பு நாடுகளை இராஜதந்திர ரீதியில் அனுகுவதனையும் காண்பிக்கின்றது.
கடந்த காலங்களில் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவினால் நேரடியாக அல்லது மறைமுகமாக மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளில் சவூதி அரேபியா உட்பட ஏராளமான இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவுக்கு சார்பான போக்கினையே கடைப்பிடித்து வந்தன. அதாவது இஸ்லாமிய நாடுகளை அல்லது இயக்கங்களை அழிக்கும் நடவடிக்கைக்கு துணைநின்றனர்.
ஆனால் தற்போது முடிக்குரிய இளவரசர் முகம்மத் பின் சல்மான் தலைமையிலான சவூதி அரேபியாவின் போக்கில் சில மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது.
மன்னராட்சி நிலவுகின்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பது அவர்களது ஆட்சி முறையாகும். எப்படியாவது தங்களது குடும்ப ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் அமேரிக்காவை பகைத்துக்கொள்ள விரும்புவதில்லை.
அத்துடன் இவ்வாறான மன்னராட்சி நிலவுகின்ற நாடுகளின் செல்வாக்கினை பாவித்து ஏனைய இஸ்லாமிய நாடுகளையும் வளைத்துப்போட்டுக்கொண்டு பயங்கரவாதிகள் என்ற போர்வையில் நியாயமான போராட்டங்களை நசுக்கியுள்ளனர்.
அமேரிக்காவின் அராஜகத்திற்கு அடிபணிய மறுத்த ஏராளமான நாடுகளின் தலைவர்கள் தங்களது ஆட்சியை இழந்தனர். மேலும் சில தலைவர்கள் கொல்லப்பட்டதுடன், பொருளாதார தடை விதிக்கப்பட்டு நாட்டு மக்கள் வறுமையில் தவித்த வரலாறுகள் ஏராளமாக உள்ளது.
இவ்வாறான நிலை தங்களுக்கும், தங்கள் நாட்டுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்தினாலேயே அதாவது ஆட்சி அதிகாரத்தினையும் பொருளாதார நலனையும் மாத்திரம் கருத்தில் கொண்டதனால் ஹமாஸ் இயக்கத்தின் போராட்டம் நியாயமானதென்று தெரிந்திருந்தும் இஸ்லாமிய நாடுகள் பல ஒதுங்கியிருப்பதற்கு அல்லது அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்கிவருவதற்கான காரணமாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment